உலகெங்கும் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்: பறிபோன உயிர்கள் எத்தனை தெரியுமா?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

உலகெங்கும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டிய நிலையில் பல்வேறு நாடுகளில் உயிரிழப்புகள் பல நடந்துள்ளன.

இத்தாலியில் பட்டாசு கொளுத்தி புத்தாண்டை கொண்டாடிய 26 வயது இளைஞர் ஒருவர், பட்டாசு வெடித்து, அந்த அதிர்ச்சியில் 50 அடி பள்ளத்தில் எதிர்பாராத வகையில் விழுந்து மரணமடைந்துள்ளார்.

இதேபோன்று மொட்டைமாடியில் நின்றிருந்த 19 வயது இளம்பெண்ணின் மீது யாரோ கொளுத்தி வீசிய பட்டாசு வெடித்து படுகாயமடைந்துள்ளார்.

பட்டாசு வெடிப்பில் 24 வயது இளைஞர் மற்றும் 58 வயதுடையவர் ஒருவரும் காயமடைந்தனர். நேபிள்ஸ் பகுதியில் டஜன் கணக்கானோர் பட்டாசு வெடித்து காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹாங்காங்கில் புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்த்து, இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சீனாவுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

Image: Tyrone siu

ஜேர்மனியில் குரங்குகள் சரணாலையம் ஒன்று தீக்கிரையானதில் 30-க்கும் மேற்பட்ட விலங்குகள் உடல் கருகி பலியாகியுள்ளன.

Gütersloh நகரில் உணவு சமைத்துக் கொண்ருந்த போது ஏற்பட்ட நச்சுவாயு கசிவு காரணமாக 2 சிறார்கள் உள்ளிட்ட 11 பேர் காயமடைந்துள்ளனர். இதில் இருவரது நிலை கவலைக்கிடம் என தெரியவந்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் வாகனம் ஒன்றில் இருந்து பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டதாகவும் 6 பேர் காயங்களுடன் தப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Image: dpa / David Young

அவுஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களாக காட்டுத்தீக்கு 11 பேர் கொல்லப்பட்டும் பல ஆயிரங்கள் இன்னமும் சிக்கியிருக்கும் நிலையிலும் சிட்னி நகரில் வாணவேடிக்கை களைகட்டியுள்ளது.

பொதுமக்களின் ஒருபகுதியினர் குறித்த வாணவேடிக்கை கொண்டாட்டங்களை ரத்து செய்ய கோரிக்கை விடுத்தும், அது நிராகரிக்கப்பட்டதுடன், 15 மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டது இது என நகரத் தலைவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்