176 பேரின் உயிரை வாங்கிய விமான விபத்து! உக்ரேனுக்கு அமெரிக்கா கொடுத்துள்ள முக்கிய துப்பு

Report Print Santhan in ஏனைய நாடுகள்
439Shares

ஈரானில் 176 பேர் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் முக்கிய தகவல்களை அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்கியுள்ளது.

அமெரிக்கா-ஈரான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ள நிலையில், கடந்த புதன் கிழமை உக்ரேன் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று திடீரென்று எரிந்து கீழே விழுந்து நொறுங்கியதால், விமானத்தில் இருந்த பயணிகள், விமான ஊழியர்கள் என விமானத்தில் இருந்த பிரித்தானியா, கனடா என பல்வேறு நாடுகளை சேர்ந்த176 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்து நடந்த அன்று தான் ஈரான், ஈராக்கில் இருந்த அமெரிக்க இராணுவதளம் மீது தாக்குதல் நடத்தியதால், ஈரான் தான் விமானத்தை ஏவுகணை மூலம் சுட்டி வீழ்த்தியுள்ளது, அதை மறுக்கிறது என்று அமெரிக்கா, பிரித்தானியா, கனடா போன்ற நாடுகள் கூறி வருகின்றன.

அதுமட்டுமின்றி ஈரான் தான் இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரங்கள் அப்பட்டமாக ஆதாரங்கள் இருப்பதாக கூறப்பட்டது, அந்த ஆதாரத்தை அழிப்பதற்காக ஈரான் விமான விபத்து நடந்த இடத்தில் புல்ட்ரோசர்களை பயன்படுத்தியது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஈரானில் ஏற்பட்ட விமான விபத்து குறித்து, அமெரிக்கா, உக்ரேனுக்கு முக்கிய தகவல் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல்களை பெறுவதற்காக உக்ரேன் நாட்டு அதிபர் Volodymyr Zelenskiy மற்றும் வெளியுறவு அமைச்சர், அமெரிக்க பிரதிநிதிகளை சந்தித்து பேசியுள்ளனர்.

Volodymyr Zelenskiy/Photo by Mykhailo Markiv

ஆனால் அது குறித்து விரிவான தகவல்கள் வெளியாகவில்லை, இதற்கிடையில், வெளியுறவு அமைச்சர் Vadym Prystaiko தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இந்த விமான விபத்து குறித்து அமெரிக்கா தங்களுக்கு முக்கிய தகவல்களை கொடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதற்கு முன்பு, அதிபர் Volodymyr Zelenskiy, ஏவுகணையால் தான் விமான விபத்து நடந்துள்ளது என்பதை நிராகரிக்கவில்லை, அதை இன்னும் உறுதிப்படுத்தபடவில்லை என்று தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்