ஈரானின் பாசிஜ் படை தளபதி படுகொலை! சொந்த மண்ணில் நேர்ந்த கதி: நீடிக்கும் மர்மம்

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஈரானின் காவல்படையின் ஐந்து படைகளில் ஒன்றான பாசிஜ் படையின் தளபதி படுகொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாசிஜ் படையின் மிக முக்கியமான நபரான தளபதி அப்துல் ஹுசைன் மொஜாடாமி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஈரானின் டார்கோவினில் உள்ள பாசிஜ் படையின் தலைமையகத்தில் புதன்கிழமை காலை முகமூடி அணிந்த மர்ம நபர்களால் மொஜாடாமி சுட்டுக் கொல்லப்பட்டார் என உள்ளுர் ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் ஈராக்கில் ஈரான் தளபதி குவாசிம் சுலைமானியை அமெரிக்கா படுகொலை செய்தத்ற்கு ஏவுகணை தாக்குதல் நடத்தி ஈரான் பதிலடி கொடுத்தது.

தற்போது, இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றம் சற்று குறைந்துள்ள நிலையில், ஈரானில் வைத்தே அந்நாட்டு படைப்பிரிவின் தளபதி கொல்லப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், தற்போது வரை பாசிஜ் படையின் தளபதி அப்துல் ஹுசைன் மொஜாடாமி கொல்லப்பட்டது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இது குறித்து எந்த தகவலையும் ஈரான் வெளியிடவில்லை.

அரசியல் காரணங்களுக்கா தளபதி அப்துல் ஹுசைன் மொஜாடாமியின் கொலையை ஈரான் மூடி மறைப்பதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers