கொரோனா வைரஸ் விவகாரத்தில் அச்சத்தை பரப்பும் அமெரிக்கா! சீனா வெளியிட்ட தகவல்

Report Print Abisha in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸ் குறித்து அமெரிக்கா பதற்றத்தையும், அச்சத்தையும் தூண்டி விடுவதாக சீனா குற்றச்சாட்டு முன் வைத்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின், சீனாவிற்கு சென்று வந்தவர்களை அமெரிக்கா தன் நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை.

இதுவரை 17,000பேருக்கும் சீனாவில் அந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது ஊறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 361பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல் சீனாவை தவிர்த்து மற்ற நாடுகளில் உள்ளவர் 150பேருக்கும் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது தற்போது வரை உறுதியாகியுள்ளது.

அமெரிக்காவின் நடவடிக்கைகள்

2020 ஜனவரி 23ஆம் திகதி வைரஸ் தொற்று உருவான வுகான் நகரில் இருந்து அமெரிக்க ஊழியர்கள் அனைவரும் வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவிட்டது.

முதல் ஒருவாரத்திற்குள் தானாக அனைவரும் முன்வந்து வெளியேற அமெரிக்க அரசு அனுமதியும் அளித்திருந்தது.

இந்நிலையில், ஜனவரி 30ஆம் திகதி உலக சுகாதார மையம், உலக சுகாதார எச்சரிக்கையை அறிவித்தது.

இதனை அடுத்து 21வயதிற்கு உட்பட்ட அமெரிக்கர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சீனாவில் இருந்து வெளியேற அமெரிக்க உத்தரவு பிறப்பித்தது.

அதில், ஹூபே மாகாணத்தில் இருந்து திரும்பிய அமெரிக்கர்களை 14நாட்கள் தீவிர கண்காணிப்பில் வைத்திருக்க அமெரிக்க முடிவு செய்தது.

மற்ற நாடுகள் செய்தவை

  • ஹொங்ஹொங் சீனாவின் பெரிய எல்லையை மூட திட்டமிட்டது.
  • சீனாவில், இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்பியவர்களை அவுஸ்திரேலியா, அமெரிக்கா, சிங்கபூர் ஆகிய நாடுகள் தற்போது தடைசெய்துள்ளன.
  • சீனாவிற்கு பயணித்த வெளிநாட்டினரை நீயூசிலாந்து மற்றும் இஸ்ரேல் தடை செய்தது.
  • ஹூபே நகரத்திற்கு பயணம் செய்த வெளிநாட்டினரை ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகள் தடைசெய்தன.
  • தற்காலிகமாக சீனா செல்லும், அனைத்து விமானங்களையும் எகிப்த், பின்லாந்த், இந்தோனேசியா, பிரித்தானியா, இத்தாலி நிறுத்தியது.
  • சீனாவுடனான எல்லைகளுக்கு தடை விதிப்பதாக மங்கோலியா மற்றும் ரஷ்யா அறிவித்தது.

சீனாவிற்கு வெளியில் கொரோனா பாதித்த நாடுகள்

அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து சீனாவின் கருத்து

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் Hua Chunying “அமெரிக்கா உதவி வழங்குவதற்கு பதிலாக பயத்தை உருவாக்கி உலகம் முழுவதும் பரப்புகிறது.

சீன பயணிகளுக்கு தடை விதித்த முதல் நாடு அமெரிக்காதான். அதேபோல் தூதரக ஊழியர்களை முதலில் திரும்ப அழைத்த நாடும் அமெரிக்காதான் என்றார்.

இது அமெரிக்கா போன்ற உயர்ந்த நாடுகளால் தடுக்க கூடிய தொற்றுநோய் தான். ஆனால், அந்நாடு தடைகளை நீட்டிக்கவே உலக சுகாதார அமைப்பிற்கு பரிந்துரைத்து வருகின்றது” என்று ராய்ட்டஸ் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

உரிய ஆவணங்கள் இல்லாமல் எல்லை வழியாக சீனாவிற்குள் நுழைவது ஆபத்து என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.

WHO தலைவர் Dr Tedros Adhanom Ghebreyesus பயணத்தடைகள், பொருளாதாரம், மருத்துவம் போன்றவற்றை முற்றிலும் தடை செய்வதாக அமையும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், சீனா அமெரிக்காமீது இதுபோன்ற வலுவான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...