வெளிநாட்டில் இருந்து கொண்டு உளவு ரகசியத்தை வெளியிட்ட சீன எழுத்தாளருக்கு தண்டனை விபரம் அறிவிப்பு

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
162Shares

சீனாவில் பிறந்த ஸ்வீடன் குடிமகனும் எழுத்தாளருமான குவின் மின்ஹைய்க்கு சீனா பத்தாண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

சீனாவில் பிறந்தவர் குவின் மின்ஹைய். இவர் ஹொங்ஹொங்கில் இருந்துகொண்டு சீன அரசியலையும், சீன அரசியல் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டே சீன அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட குவின் மின்ஹைய் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சீனா - ஸ்வீடன் இடையேயான அரசாங்கம் சம்பந்தப்பட்ட உளவு ரகசியங்களை குவின் வெளியிட்டார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டப்பட்டது.

இது தொடர்பான வழக்கு சீனாவின் வடமேற்கு நகர நீதிமன்றமான நிங்போ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில் இவ்வழக்கில் குவின் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதோடு அவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தும் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையில் குவின் விடுதலைக்காக பரப்புரை செய்து வரும் அவரது மகள் ஏஞ்சலா குயியை அமைதியாக்குவதற்கான முயற்சிகளும் நடந்திருப்பதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்