கொரோனா வியாதிக்கு இலக்கான சுகாதார அமைச்சர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள்: எகிறும் பலி எண்ணிக்கை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
672Shares

ஈரானில் துணை சுகாதார அமைச்சர் மற்றும் ஒரு மக்களவை உறுப்பினருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக திங்களன்று செய்தி ஊடகங்களில் தெரிவித்த சுகாதார துணை அமைச்சர் Iraj Harirchi என்பவரே தற்போது கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவருடன் திங்களன்று பத்திரிகையாளர் சந்திப்பை முன்னெடுத்த மக்களவை உறுப்பினர் Mahmoud Sadeghi என்பவருக்கும் கொரோனா பாதிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 95 பேர் இலக்காகி உள்ளனர். இன்று மட்டும் 34 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இன்று 3 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள நிலையில், கொரோனா வியாதியால் ஈரானில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 15 என அதிகரித்துள்ளது.

இருப்பினும், உண்மையான புள்ளிவிவரங்கள் மிக அதிகம் என்ற வலுவான சந்தேகம் எழுந்துள்ளது. ஈரானிய மக்களவை உறுப்பினர் ஒருவர் நேற்று கோம் நகரில் மட்டும் கொரோனா பாதிப்பால் 50 பேர் இறந்துவிட்டதாக தெரிவித்திருந்தார்.

சீனாவிலிருந்து ஈரானுக்கு வைரஸ் பரவியதாக நம்பப்படும் கோம் நகரம், மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த ஷியா பிரிவு யாத்ரீகர்களுக்கு முக்கிய பகுதியாகும்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்