அண்டார்டிகாத் தவிர்த்து உலகின் அனைத்து கண்டத்திலும் பரவிய கொரோனா வைரஸ்: வெளியான மொத்த தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவிய கொடிய கொரோன வைரஸ் தற்போது அண்டார்டிகாத் தவிர்த்து உலகின் அனைத்து கண்டத்திலும் பரவியுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணத்தில் அமைந்துள்ள வுஹான் நகரில் இருந்து கடந்த ஜனவரி 22 ஆம் திகதி முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பில் தகவல் வெளியானது.

சீனாவில் மட்டும் இதுவரை 78,499 பேர் கொரோனா வியாதி தாக்குதலுக்கு இலக்காகி சிகிச்சையில் இருந்து வருகின்றனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 32 பேர் மரணமடைந்துள்ள நிலையில், புதிதாக 435 பேர் கொரோனாவுக்கு இலக்காகியுள்ளனர்.

மேலும் கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 2,804 பேர் பலியாகியுள்ள நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் 8,469 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்துள்ள நிலையில், எஞ்சிய ஆசிய ஐரோப்பிய, மத்தியக் கிழக்கு நாடுகளில் அதிவேகமாக பரவி வருகிறது.

இத்தாலியில் சுமார் 470 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 12 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.

பிரேசில் நாட்டில் நேற்று ஒருவர் கொரோனா நோயால் தாக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து கொரோனா வைரஸ் தற்போது அண்டார்டிகாவைத் தவிர உலகின் அனைத்து கண்டத்திலும் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மட்டுமின்றி கிரீஸ், வடக்கு மாசிடோனியா, ஜார்ஜியா மற்றும் பாகிஸ்தானில் முதல் முறையாக கொரோனா பாதிப்பு தொடர்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஸ்பெயின், பிரான்ஸ், குரோஷியா, ஆஸ்திரியா மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட சுற்றுலாவுக்கு பெயர்போன நாடுகளுக்கு,

தற்போது கொரோனா பீதியால் மக்கள் விடுமுறை கொண்டாட்டங்களை தவிர்க்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு ஏற்படுத்தும் தாக்கமானது விமான சேவையில் சர்வதேச அளவில் மொத்தம் 23 பில்லியன் பவுண்டுகளின் இழப்பை ஏற்படுத்தலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...