இத்தாலியில் கொரோனா பரவியது எப்படி?: கர்ப்பிணி மனைவி உட்பட 13 பேருக்கு நோயை பரப்பியவர் இவர்தானாம்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

இத்தாலியில் 13 பேருக்கு கொரோனா வைரஸை பரப்பி, ஒருவர் உயிரிழக்கவும் காரணமாக இருந்தவர் யார் என்ற உண்மை வெளியாகியுள்ளது.

இத்தாலியரான Mattia (38) என்பவர்தான் கர்ப்பிணியான தன் மனைவி, இரண்டு மருத்துவர்கள், ஒரு 77 வயது முதிய பெண்மணி, மற்றும் 9 பேருக்கு கொரோனா தொற்றை பரப்பியுள்ளார்.

அந்த 77 வயது பெண்மணி உயிரிழந்துவிட்டார். ஆனால், இதற்கெல்லாம் அவரை முழுமையாக குற்றம் சொல்ல முடியாது. காரணம், மூன்று முறை அவர் வட இத்தாலியின் Codognoவிலுள்ள மருத்துவமனைக்கு உடல் நலமில்லை என்று கூறி சென்றுள்ளார்.

ஆனால், அவர் சீனாவுக்கு செல்லவில்லை என்பதால், அவருக்கு கொரோனா இருக்காது என மருத்துவமனை ஊழியர்கள் அலட்சியமாக இருந்துவிட்டனர்.

ப்ளூ காய்ச்சலுக்கான மருந்துகளை கொடுத்து அவரை வீட்டுக்கு அனுப்பிவிட, அவர் தெரியாமலே பலருக்கு கொரோனா வைரஸை பரப்பியுள்ளார்.

மாரத்தான் ஓட்டப்பந்தய வீரரான Mattia, முதலில் பெப்ரவரி 14ஆம் திகதி தனக்கு உடல் நலமில்லை என்று தெரிவித்த நிலையிலும், பெப்ரவரி மாதம் 20ஆம் திகதிதான் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஆனால், அதற்குள் அவர் தன் மனைவி Valentina, தன்னுடன் ஜாகிங் செலும் நண்பர், தனது மருத்துவர் உட்பட இரண்டு மருத்துவர்கள், மதுபான விடுதியில் மூன்று முதியவர்கள் மற்றும் உயிரிழந்துவிட்ட 77 வயது பெண் ஒருவர் உட்பட குறைந்தது 13 பேருக்கு நோய்த்தொற்றை பரப்பிவிட்டார்.

இப்போது இத்தாலியில் 450 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பரவியதுடன், 12 பேர் உயிரிழந்தும்விட்டார்கள்.

முதலிலேயே அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருந்தால் இத்தனை பேருக்கு கொரோனா பரவாமல் தடுத்திருக்கலாம் என்பதால், பரிசோதனை செய்ய தவறிய மருத்துவமனையை இத்தாலிய பிரதமர் கண்டித்துள்ளார்.

Codognoவிலுள்ள மருத்துவமனைகள் மீது அதிகாரிகள் விசாரணையை துவக்கியுள்ளார்கள். இந்நிலையில், Mattia அபாயகரமான நிலையில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கர்ப்பிணியான அவரது மனைவி மற்றொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், அவரது நிலைமை தற்போதைக்கு கவலைப்படத்தக்க நிலையில் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...