கொரோனா வைரஸ் வுகானில் முதன்முதலில் பரவவில்லை! தமிழில் பேசி முக்கிய தகவல்களை கூறிய சீனரின் வீடியோ

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸ் உருவான இடம் எது என்ற சர்ச்சைக்குரிய விவகாரம் குறித்து சீன ஊடக குழுமத்தை சேர்ந்த கலைமணி பதிலளித்துள்ளார்.

சீனரான கலைமணி தமிழிலேயே அளித்த பேட்டியில், சீனாவின் வுகான் நகரில் தான் கொரோனா முதன்முதலில் பரவியது என்பதில் உண்மையில்லை.

ஏனெனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை முதலில் ஆய்வு செய்த போது இந்த நகருடன் தொடர்பில்லை என தெரியவந்தது.

உண்மையில் கொரோனா எங்கிருந்து பரவியது என்பது உறுதியாக தெரியவில்லை. 2019ல் ஜப்பான் தொலைக்காட்சி செய்தி ஒன்றை வெளியிட்டது.

வீடியோவை காண

அதில், அமெரிக்காவில் தோன்றிய காய்ச்சலால் 3 கோடியே 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அவர்களில் ஒரு பகுதியினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உண்மையில் அது காய்ச்சல் இல்லை, கொரோனா வைரஸ் தான். இந்த செய்திக்கு நடுவில் சீன மக்களிடையே ஒரு கருத்து உள்ளது.

அதாவது, கடந்த அக்டோபரில் வுகானில் ராணுவ வீரர்களிடையே விளையாட்டு போட்டி நடைபெற்றது.

இக்காலத்தில் கொரோனா வைரஸ் சில நாடுகளில் இருந்து வுகானுக்கு வந்திருக்க வாய்ப்புள்ளது என கருத்துக்கள் கூறப்படுகிறது.

அந்த வகையில் கொரோனா வைரஸ் வுகானில் தான் தோன்றியது என்பதை நம்மால் கூறமுடியாது. கொரோனா வைரஸை 58 குடும்பத்தில் சேர்க்கலாம்.

அந்த வகைகள் ஏ, பி, சி, டி, ஈ என 5 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. வெளவாலில் இருந்து இதன் ஒருவகை பரவியிருக்கலாம்.

இதில் குரூப் டி வைரஸ் தான் மிகவும் வலிமையானது என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்