இதுவே முதல் முறை! கொரோனா குறித்து சீனா வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி... நிம்மதியான மக்கள்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில பலர் உயிரிழந்த நிலையில், தற்போது அங்கு முதல் முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து புதிதாக எந்த ஒரு வழக்கும் இல்லை என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் பரவிய இந்த கொரோனா வைரஸ் காரணமாக, தற்போது உலகில் 219,067 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,961 பேர் உயிரிழந்துள்ளனர். 85,673 பேர் சிகிச்சைக்கு பின் மீண்டுள்ளனர்.

சீனாவில் மட்டும் இந்த வைரஸால் 80,928 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,245 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் காரணமாக சீனாவே முற்றிலும் முடங்கியது. அதன் பின் கொண்டு வந்த பல கடுமையான நடவடிக்கைகளால், அந்நாட்டில் வைரஸின் தாக்கம் குறைந்து கொண்டே வந்தது.

அதுமட்டுமின்றி புதிதாக துவங்கப்பட்டிருந்த மருத்துவமனைகளில் இருந்த நோயாளிகள் பலரும் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்துவிட்டதால், அந்த மருத்துவமனைகள் காலியாக உள்ள புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகின.

அதைத் தொடர்ந்து வைரஸை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாகவும், இருப்பினும் சீன அரசு எச்சரிக்கையாகா இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சீனாவின் சுகாதார அமைச்சகம், வுஹான் மற்றும் அதை சுற்றியுள்ள ஹூபே மாகாணத்திலும் உலகெங்கிலும் பரவியிருக்கும் கொடிய தொற்றுநோய்க்கு புதிததாக எந்த ஒரு வழக்குகள்(நோயால் பாதிக்கப்பட்டவர்கள்)இல்லை.இது கொரோனா வைரஸ் பரவலுக்கு பின் முதல் முறையாகும்.

அதே சமயம் 34 பேர் புதிததாக கொரோனா வைரஸ் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் அவர்கள் வெளிநாட்டில் இருந்து சீனாவிற்கு வந்தவர்கள், சீனாவில் அதாவது உள்ளூரில் எந்த ஒரு புதிதாக வழக்குகளும் இல்லை தெரிவித்துள்ளது.

கொரோனாவின் கோர பிடியில் சிக்கி தவித்த நாடுகளில் சீனாவும் ஒன்று, தற்போது அந்நாட்டில் இது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால், அந்நாட்டு மக்கள் இந்த செய்தியை மகிழ்ச்சியாக பகிருந்து வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...