கொரோனா வைரஸ்க்கு சவுதி அரேபியாவில் முதல் மரணம்..! உறுதி செய்த சுகாதாரத்துறை

Report Print Basu in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸ் பாதிப்பால் சவுதி அரேபியாவில் முதல் மரணம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதிசெய்துள்ளது.

சவுதியில் கொரோனா உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 767 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 205 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது.

கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த சவுதி அரேபியா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடக்கிவிட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் அடுத்த 21 நாட்களுக்கு இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டத்தை மீறுபவர்கள் அனைவருக்கும் 10,000 ரியால்கள் அபராதம் விதிக்கப்படும், தொடர்ந்து மீறுபவர்கள் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் என்று நாட்டின் உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக சவுதியில் முக்கிய நகரங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்