கொரோனா பாதிப்பு... பலி எண்ணிக்கையில் சீனாவை முந்திய ஸ்பெயின்!

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

கொரோனாவின் கோரப்பிடிக்கு இத்தாலியில் 7,503 பேர் இறந்துள்ள நிலையில், ஸ்பெயின் நாட்டில் 3647 பேர் மரணமடைந்து இரண்டாவது இடத்தை எட்டியுள்ளது.

அதிகரித்துவரும் கொரோனா பாதிப்புக்கு ஐரோப்பிய நாடுகளில் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு முதன் முதலாக கண்டறியப்பட்ட நாடான சீனாவில் மிக குறுகிய நாட்களில் பலி எண்ணிக்கை மூன்றாயிரத்தை தாண்டியது.

ஆனால் ஐரோப்பிய நாடான இத்தாலியில் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்ல சீனா உயிரிழப்பை கட்டுப்படுத்தியது.

தற்போது சீனாவை விட இரண்டு மடங்கு இத்தாலியில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ஸ்பெயினில் பலி எண்ணிக்கை அதிகரித்த நிலையில் உள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு அதிகமானோரை பலிகொண்ட நாடுகள் பட்டியலில் தற்போது ஸ்பெயின் 2-வது இடத்திற்கு முந்தியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இத்தாலியில் 683 பேர் மரணமடைந்துள்ளனர். ஸ்பெயினில் 656 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதற்கு அடுத்தப்படியாக ஈரானில் 143 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்சில் 231 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொரோனா வைரசால் 4 லட்சத்து 68 ஆயிரத்து 354 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்