கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிக்கும் மருந்து குறித்த தகவலை வெளியிட்டது பஹ்ரைன்

Report Print Basu in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸூக்கு சிசிக்சையளிக்கும் மருந்து குறித்த தகவலை பஹ்ரைனின் சுகாதார ஆணையத்தின் தலைவரும், கொரோனா வைரஸை எதிர்ப்பதற்கான தேசிய பணிக்குழுவின் தலைவருமான ஷேக் முகமது பின் அப்துல்லா அல் கலீஃபா கூறினார்.

பஹ்ரைனில் கொரோனாவால் 4 பேர் பலியாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 419 ஆக அதிகரித்துள்ளது.

எனினும், 190 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தின் மூலம் சிகிச்கையளிப்பதாக ஷேக் முகமது பின் அப்துல்லா அல் கலீஃபா கூறினார்.

கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்திய முதல் நாடுகளில் பஹ்ரைன் ஒன்றாகும்.

பஹ்ரைனில் கொரோனாவின் முதல் வழக்கு பெப்ரவரி 24ம் திகதி கண்டறியப்பட்ட நிலையில் பெப்ரவரி 26ம் திகதி குறித்த மருந்தை அந்நாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, அமெரி்க்கா ஜனாதிபதி டிரம்ப் கொரோனா சிகிச்சைக்கு குளோரோகுயின் மருந்தை பயன்படுத்துமாறு பரிந்துரைத்தார்.

ஆனால், கொரோனாவுக்கான மருந்து குறித்து பரிசோதனை நடந்து வரும் நிலையில் குளோரோகுயின் மருந்தை பயன்படுத்த வேண்டாம் என நிபுணர்கள் எச்சரித்தனர்

அதேசயம் உலகளவில் கொரோனா ரைஸ்க்கு குளோரோகுயின் மருந்து பலன் அளிக்குமா என பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் பிற முக்கிய மருந்துகளை ஏற்றுமதி செய்வதை இந்திய அரசாங்கம் புதன்கிழமை தடை செய்தது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்