உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் கொரோனா தொற்று! ஆயிரகணக்கானோர் இறப்பார்கள்...

Report Print Abisha in ஏனைய நாடுகள்

வங்கதேசத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் வாழ்ந்து வரும் இரண்டு ரோஹிஞ்சா அகதிகளுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

கிட்டதட்ட ஒரு மில்லியன் ரோஹிஞ்சா அகதிகள் வாழ்ந்துவரும் காக்ஸ் பஜார் முகாமில் தற்போது முதல் முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும், 1900பேர் பரிசோதனைக்காக தனிமைபடுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் ரோஹிஞ்சா அகதிகள் நெருக்கடியான சூழ்நிலையிலும், சுத்தமான குடிநீரும் கிடைக்காமல் வாழ்ந்து வரும் நிலையில், இங்கு வைரஸ் பாதிப்பு ஏற்படலாம் உதவி அமைப்புகள் முன்பே எச்சரித்து இருந்தன.

"உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமான காக்ஸ் பஜாருக்கு கொரோனா வைரஸ் வந்துவிட்டது. இந்த நிலை நீடித்தால் வைரஸ் தொற்று காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் இறப்பார்கள்'' என்று வங்கதேசத்தின் Save the childresn என்ற அமைப்பின் சுகாதார இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்