உலகையே திரும்பி பார்க்க வைத்த குட்டி நாடு! மார்ச் மாதமே கொரோனாவை கணித்து அந்நாட்டு அதிபர் செய்த செயல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

கொரோனா காரணமாக ஆரம்பத்தில் எச்சரிக்கையாக வட அமெரிக்காவின் அருகே உள்ள எல் சால்வென்டர் நாட்டின் அதிபர் எடுத்த முடிவுகள் தவறானவை என்று நினைக்க தோன்றிய நிலையில், தற்போது உலகநாடுகள் அனைத்தையும் அவர் திரும்பி பார்க்க வைத்துவிட்டார் என்றே கூறலாம்.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் இவ்வளவு பெரிய உயிர்களை பலி வாங்கும் என்று எந்த ஒரு நாடும் அப்போது எதிர்பார்க்கவில்லை.

ஏதோ சாதரண வைரஸ் காய்ச்சல் போன்று தான் என்று எண்ணப்பட்டது. ஆனால், அதன் பின் இந்த வைரஸ் மெல்ல, மெல்ல ஐரோப்பிய, ஆசிய போன்ற நாடுகளில் பரவியது.

பல லட்சம் உயிர்கள் போனாது. ஆரம்பத்திலே தங்கள் நாட்டின் போக்குவரத்து மற்றும் எல்லைகளை மூடியிருந்தால், வெளிநாட்டில் இருந்து வருபவர்களினால் இந்த வைரஸ் பரவல் குறைந்திருக்கும் என்ற கருத்தம் உள்ளது.

அந்த கருத்தை போன்று, கொரோனா தங்கள் நாட்டில் பரவும் முன்னரே வட அமெரிக்காவின் அருகே உள்ள குட்டி நாடான எல் சால்வென்டர் நாட்டின் அதிபர் நியாப் புகேலே அதன் எல்லைகளை மூடிவிட்டார்.

இதனால் இப்போது இங்கு கொரோனா தொற்று இல்லாமல் மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர்.

கடந்த மார்ச் மாதமே விழித்துக்கொண்ட நியாப் புகேலே உடனே சர்வதேச விமான நிலைய சேவைகளை ரத்து செய்ய உத்தரவிட்டார். இதற்கு அப்போது அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.

தற்போது அவரது முடிவையும் தொலைநோக்குப் பார்வையையும் உலகமே வியந்து பார்த்துக்கொண்டு இருக்கிறது.

38 வயது இளம் அதிபரான நியாப் புகேலே அந்நாட்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறிவிட்டார் எனவும் நாட்டின் பொருளாதாரம் மீது அக்கறை கொள்ளவில்லை எனவும் தற்போது எதிர்கட்சிகள் விமர்சனம் செய்துவருகின்றன.

இதைப் பற்றி துளி கூட கவலை கொள்ளாத புகாலே விமர்சனங்களை பொருட்படுத்தாது தைரியமாக தன் மனதுக்குப் பட்டத்தை செய்துவருகிறார்.

1992-ஆம் ஆண்டு சால்வெண்டர் போர் நடைபெற்றது. அன்று துவங்கி இரண்டு கட்சிகளே அந்நாட்டில் கோலோச்சி வந்தன.

தற்பொது அதனை தகர்த்து பாலஸ்தீன நாட்டவரான புக்காலே ஆட்சிப் பொறுப்பேற்று இளம் வயதினர் வாக்குகளை கவர்ந்து வெற்றி பெற்றார்.

தன்னை எதிர்ப்பவர்களையும், எதிர்கட்சி ஊடகங்களையும் சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்தே சமாளித்தவர் புகாலே.

2 மில்லியன் டுவிட்டர் பாலோயர்கள் கொண்ட புகாலே அதன்மூலம் பிரபலமடைந்து தற்போது தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்