4 மாதங்களாக கொரோனாவுடன் போராடி வந்த பிரபல மருத்துவரின் உயிர் பிரிந்தது! கருப்பாக மாறிய முகம்

Report Print Basu in ஏனைய நாடுகள்

கடந்த நான்கு மாதங்களாக கொரோனா வைரஸுடன் போராடி வந்த வுஹான் மருத்துவர் இறந்துவிட்டதாக உள்ளுர் ஊடகங்கள் அறிவித்துள்ளன.

சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தற்போது எனினும், சீனாவில் நிலைமை சற்று இயல்பாக இருக்கிறது.

இந்நிலையில், நான்கு மாதங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்ட வுஹான் மத்திய மருத்துவமனை மருத்துவர் ஹு வைஃபெங் இறந்துவிட்டார் என்று மாநில ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.

கல்லீரல் பிரச்சினைகளின் விளைவாக சிகிச்சையின் போது மருத்துவர் ஹுவின் முகம் கருமையாக மாறியது, இருப்பினும் அவர் குணமடந்துவிடுவார் தெரிவிக்கப்பட்டது.

பொதுவாக மூளைக்காய்ச்சல் மற்றும் செப்சிஸுக்குப் பயன்படுத்தப்படும் ஆண்டிபயாடிக் பாலிமிக்சின் பி கொண்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மருத்துவர் ஹு வைஃபெங் கொரோனா குறித்து முதன் முதலில் எச்சரிக்கை விடுத்த மருத்துவர் லி வென்லியாங் உடன் பணியற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவர் லி வென்லியாங்கின் மறைவு சீனா மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது, கொரோனாவுக்கு மத்தியலும் நாடு முழுவதும் மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்