வீட்டை விட்டு வெளியேறிய 8 வயது சிறுமி... திருமணமான தம்பதியால் ஏற்பட்ட கொடூரம்: நெஞ்சை உலுக்கும் சம்பவம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் வீட்டை விட்டு வெளியேறிய 8 வயது சிறுமியை தம்பதி ஒன்று அழைத்துச் சென்று துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக 8 வயது சிறுமி விகா டெப்லியாகோவா குடியிருப்பைவிட்டு வெளியேறியுள்ளார்.

தொடர்ந்து நகரத்தில் உள்ள தமது நண்பர்களின் குடியிருப்புக்கு அவர் சாலை மார்க்கம் நடந்தே சென்றுள்ளார்.

இந்த காட்சிகள் கண்காணிப்பு கெமராவிலும் பதிவாகியுள்ளது. இந்த நிலையில், இகோர் மற்றும் கிறிஸ்டினா டுவோர்னிகோவ் தம்பதி பரிதாபப்பட்டு தங்களது வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளது.

ஆனால் சிறுமி விகா மூன்று நாட்களாக மாயமான நிலையில், பொலிசாரின் மேற்பார்வையில் சுமார் 500 பேர் கொண்ட குழு தேடுதலில் களமிறங்கியது.

கண்காணிப்பு கெமரா காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்திய பொலிசாருக்கு, இகோர் மற்றும் கிறிஸ்டினா டுவோர்னிகோவ் தம்பதி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்களை விசாரித்த பொலிசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சிறுமிக்கு உதவுவதாக அழைத்துச் சென்ற இகோர் மனைவியின் ஒப்புதலுடன், சிறுமியை வலுக்கட்டாயமாக சீரழித்துள்ளார்.

பின்னர் பரிதாப நிலையில் இருந்த சிறுமியை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். இதனையடுத்து அருகாமையில் உள்ள ஏரி ஒன்றின் அருகே சடலத்தை மறைவு செய்துள்ளார்.

இகோர் டுவோர்னிகோவ் ஆரம்பத்தில் சிறுமியைக் கடத்தி, துஷ்பிரயோகம் செய்து கொலை செய்ததை மறுத்துள்ளார், ஆனால் பின்னர் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில், பொலிசார் கொலை வழக்கு விசாரணையை முன்னெடுக்க இருப்பதால் இகோர் மற்றும் அவரது மனைவியை கைது செய்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்