நான்கு சகோதரிகளுடன் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு: புதிதாக குடியேறிய இல்லத்தில் கோர சம்பவம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
648Shares

சவுதி அரேபியாவில் பல்கலைக்கழக மாணவரும் அவரது நான்கு சகோதரிகளும் தங்களது புதிய குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெற்றோர் உள்ளிட்ட உறவினர்களை உலுக்கியுள்ளது.

கொல்லப்பட்ட 5 பேரும் 14 முதல் 22 வயதுடையவர்கள் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவின் கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள அல் அஹ்சா அருகே அல் ஷுபா பகுதியிலேயே இந்த நடுங்க வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

தங்களது புதிய குடியிருப்பில் பிள்ளைகளை கொலை செய்யப்பட்ட நிலையில் தந்தையே முதன் முறையாக கண்டுள்ளார்.

குற்றவாளிகள் தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

5 பிள்ளைகளுடன் தங்களது புதிய குடியிருப்பை பார்வையிட சென்றுள்ள பெற்றோர், பின்னர் உணவுப் பொருட்களை வாங்க கடைக்கு சென்றுள்ளனர்.

திரும்பி வந்தபோது, கதவு உள்ளிருந்து பூட்டப்பட்டுள்ளதை அந்த தந்தை தெரிந்து கொண்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து பிள்ளைகளை பல முறை அழைத்து கதவு திறக்க கோரியுள்ளார். ஆனால் உள்ளே இருந்து எந்த சத்தவும் இல்லை என்பதை உணர்ந்த அவர், கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளதாக உறவினர் ஒருவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

உள்ளே 5 பிள்ளைகளும் ரத்த வெள்ளத்தில் குளித்த நிலையில், சடலமாக கிடந்துள்ளனர்.

அதிர்ந்து போன அந்த தந்தை உடனடியாக அருகாமையில் உள்ள பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், ரத்த மாதிரிகள் உள்ளிட்ட தரவுகளை சேகரித்து உரிய பரிசோதனைகளுக்கு அனுப்பியுள்ளனர்.

சடலங்களை தடயவியல் மருத்துவ துறைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. பிரேத பரிசோதனை அறிக்கையானது அரசு தரப்பு வழக்கைஞர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்ட 22 வயது இளைஞர் மொயத், கிங் பைசல் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழியில் நிபுணத்துவம் பெற்ற பல்கலைக்கழக மாணவர் என அவரது உறவினர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்