துப்பாக்கிகளுடன் ராணுவ தளபதிகள்: கம்பீரமாக போஸ் கொடுத்த வடகொரியா ஜனாதிபதி

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

கொரியப்போரின் 67வது ஆண்டு நினைவு தினம் கொண்டாடப்பட்ட காட்சிகளை வடகொரியா அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.

வடகொரியாவில் கொரியப்போரின் 67வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட ராணுவ தளபதிகளுக்கு Paektusan என்றழைக்கப்படும் துப்பாக்கியை ஜனாதிபதி கிம் ஜாங் உன் பரிசளித்தார்.

இவர்கள் அனைவரும் கிம்-முக்கு நம்பிக்கையான நபர்கள் என உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

தங்கள் துப்பாக்கிகளை மார்பில் சுமந்தபடி கிம்முடன் இவர்கள் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

தங்கள் நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் இல்லை என்பதை உணர்த்தும் விதமாக கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் யாரும் முகக் கவசம் அணிந்திருக்கவில்லை.

இதற்கிடையே நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வடகொரியா அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்