தனது இறப்பை 1 வருடத்துக்கு முன்னரே கணித்த இளைஞன்! பெரிதாக எடுத்து கொள்ளாத நண்பர்கள்...பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
5267Shares

கென்யாவில் தனது இறப்பு நிகழ போகும் மாதத்தை இளைஞர் கணித்த நிலையில் அதே மாதத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

Juma Kaiburi Baitairi என்ற 31 வயது இளைஞர் ஆய்வு அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை Juma கொரோனா தொற்றால் உயிரிழந்தார். கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி Juma தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

அதில், ஆகஸ்ட் மாதம் எனக்கு மிகவும் நெருக்கமானது.

ஏனெனில் ஆகஸ்ட் மாதத்தில் தான் நான் பிறந்தேன், அதே மாதத்தில் தான் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன், பல விடயங்கள் எனக்கு ஆகஸ்ட்டில் நடந்துள்ளது.

நான் இறக்கும் மாதமும் ஆகஸ்டாக இருக்கலாம் என தெரிவித்திருந்தார்.

அதே போல இந்தாண்டு தனது 32 வயது தொடங்கிய நாளில் Juma உயிரிழந்துள்ளார்.

இது குறித்து அவர் நண்பர் கூறுகையில், Jumaவின் பேஸ்புக் பதிவை அப்போது யாரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

ஆனால் இப்போது, அவர் கூறியது நடந்துள்ளது அதிர்ச்சியை கொடுக்கிறது.

நேர்மையான மனிதராக வாழ்ந்த Juma கடுமையான உழைப்பாளியாகவும், நகைச்சுவை திறன் அதிகம் கொண்டவராகவும் இருந்தார் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்