பிரான்ஸ் ஆசிரியரின் தலையை வெட்டிக் கொன்ற தீவிரவாதி: அவரது உடலை சொந்த நாட்டில் என்ன செய்கிறார்கள் பாருங்க!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
1274Shares

பிரான்சில் ஆசிரியர் ஒருவரின் தலையை வெட்டிக் கொன்ற தீவிரவாதியை, ஒரு ஹீரோவுக்குரிய மரியாதையுடன் அடக்கம் செய்துள்ளனர் அவரது சொந்த நாட்டினர்.

பிரான்சில் வரலாற்று ஆசிரியரான Samuel Paty என்பவர் முகமது நபியின் கேலிச்சித்திரங்களை வகுப்பறையில் காட்டியதற்காக, Abdoulakh Anzorov (18) என்ற செசன்ய தீவிரவாதி அவரது தலையை வெட்டி கொடூரமாக கொலை செய்தான். பொலிசார் உடனடியாக அவனை சுட்டுக்கொன்றனர்.

இந்த விடயத்தால் இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் கூறிய கருத்துக்கள் இஸ்லாமிய நாடுகளில் கடும் கண்டனத்துக்குள்ளானது நினைவிருக்கலாம்.

இந்நிலையில், Anzorovஇன் சொந்த ஊரான, ரஷ்யாவிலுள்ள Shalazi என்ற ஊருக்கு அவனது உடல் கொண்டுவரப்பட்டுள்ளது.

அங்கு, சுமார் 200 பேர் கலந்துகொண்ட அவனது இறுதி ஊர்வலத்தில், இஸ்லாமிய சிங்கம் என்றெல்லாம் அவனை புகழ்ந்தபடி Anzorovவின் உடலை ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்துள்ளனர் அவனது கிராம மக்கள்.

அத்துடன், அந்த கிராமத்திலுள்ள ஒரு தெருவுக்கும் Anzorovஇன் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்