பிரபல கோடீஸ்வரர் ஜாக் மா காணவில்லை! எங்கே இருக்கிறார்.. சீனாவை விமர்சித்ததால் நேர்ந்த கதியா?

Report Print Basu in ஏனைய நாடுகள்
99Shares

சீனாவை கடுமையாக விமர்த்து உரையாற்றிய அலிபாபா நிறுவனர் மற்றும் சீன கோடீஸ்வரருமான ஜாக் மா கடந்த இரண்டு மாதங்களாக பொதுவெளியில் காணப்படவில்லை என்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜாக் மாவின் Africa’s Business Heroes நிகழ்ச்சியின் இறுதி எபிசோட் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது.

இதில், ஜாக் மா ஜட்ஜாக பங்கேற்பார் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இறுதி எபிசோடில் ஜாக் மாவிற்கு பதிலாக அலிபாபா நிர்வாகி லூசி பெங் நிகழ்ச்சியின் ஜட்ஜாக பங்கேற்றார்.

நேரப்பிரச்சினை காரணமாக ஜாக் மா நிகழ்ச்சியின் இறுதி எபிசோடில் ஜட்ஜாக கலந்து கொள்ள முடிவில்லை என அலிபாபா செய்தித் தொடர்பாளர் கூறினார்.

கடைசியாக 2020 அக்டோபர் 24ம் தேதி உரையாற்றிய ஜாக் மா, சீனாவின் நிதி கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான வங்கிகளை கடுமையாக விமர்சித்தார்.

வணிகத்தில் புது புது முயற்சிகளுக்கு முட்டுகட்டையாக இருக்கும் சீனாவின் ஒழுங்கு முறையை சீர்திருத்த வேண்டும் என அழைப்பு விடுத்த ஜாக் மா, உலகளாவிய வங்கி விதிமுறைகளை முதியோர் கிளப்புடன் ஒப்பிட்டார்.

இதனையடுத்து சீன அதிகாரிகள் ஜாக் மாவை குறிவைத்தனர் மற்றும் நவம்பர் மாதம் ஜனாதிபதி Xi-யின் நேரடி உத்தரவின் பேரில் அவரது Ant குழுமத்தின் 37 பில்லியன் டொலர் பங்குகளை பொதுவில் வழங்க அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்தனர்.

பின்னர் ஜாக் மா சீனாவில் தங்க அறிவுறுத்தப்பட்டது.

கிறிஸ்துமஸ் மாலை அன்று ஜாக் மாவின் அலிபாபா குரூப்க்கு எதிராக anti-monopoly விசாரணை தொடங்கப்பட்டது.

ஜாக் மாவின் நிதி தொழில்நுட்ப நிறுவனமான Ant குழுமத்திற்கு அதன் நடவடிக்கைகளை குறைக்க சீன அதிகாரிகள் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

மாவின் பேச்சு சீன அரசாங்கத்தை கோபப்படுத்தியதாக அறிக்கைகள் ஊகிக்கின்றன, இது அவரது விமர்சனங்களை கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரத்திற்கு எதிரான தாக்குதல் என்று கருதியதாக கூறப்படுகிறது.

அக்டோபர் ஜாக் மா சர்ச்சையாக பேசி நாள் முதல் ஜாக் மாவின் வணிக சாம்ராஜ்யம், Ant குழுமம் சீனாவின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாம்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்