ப்ராக்கோலியில் நாா்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் கே, இரும்புச்சத்து, புரோட்டீன் மற்றும் பொட்டாசியம் போன்ற எல்லா வகையான ஊட்டச்சத்துகளும் நிறைந்திருக்கின்றன.
அரை கப் அளவு வேக வைத்த ப்ராக்கோலியில் 27 கலோாிகள் மற்றும் 3 கிராம் காா்போஹைட்ரேட்டுகள் மட்டுமே உள்ளன.
அதனால் நீரிழிவு நோயால் பொிதும் பாதிக்கப்பட்டிருப்பவா்கள் ப்ராக்கோலியை அதிகம் உண்ணலாம்.
குறிப்பாக 2 ஆம் வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பவா்கள் இந்த ப்ராக்கோலியை அதிகம் உண்ண வேண்டும்
ப்ராக்கோலியின் முக்கிய அம்சம் என்னவென்றால், அதை சமைத்தோ அல்லது பச்சையாகவோ உண்ணலாம்.
அதோடு ப்ராக்கோலியில் மேலும் இரண்டு ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களான லூடீன் (lutein) மற்றும் ஸியாக்ஸன்தின் (zeaxanthin) போன்றவை உள்ளன. இவை கண் நோய்கள் வராமல் தடுக்கும்.
ஏன் சாப்பிட வேண்டும்?
2 ஆம் வகை நீரிழிவு நோயாளிகள் ப்ராக்கோலியை சாப்பிட்டால், நோயின் தாக்கத்தை எளிதாகக் கையாள முடியும். ஏனெனில் ப்ராக்கோலியில் சல்ஃபோராஃபேன் என்ற ஆக்ஸிஜனேற்ற தடுப்பான் உள்ளது.
நீரிழிவு நோயாளிகள் உண்ண வேண்டிய மற்ற காய்கறிகள்
- காலிஃப்ளவா்
- குடைமிளகாய்
- கேரட்
- பசலைக்கீரை
- காளான்
- பச்சை பீன்ஸ்
- கத்தாிக்காய்