எங்களின் மிகப் பெரிய எதிரியே இந்த நாடு தான்! தயாராக இருக்க வேண்டும்: கிம் ஜாங் உன்னின் எச்சரிக்கை

Report Print Santhan in ஏனைய நாடுகள்
1150Shares

அமெரிக்கா தான் எங்களுக்கு மிகப் பெரிய எதிர் என்று வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார். இவர் வரும் 20-ஆம் திகதி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ளார்.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போதைய அதிபரான டிரம்ப் பதவி விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.

இருப்பினும் டிரம்ப் தான் அதிபராக இருந்த காலகட்டத்தில் பல்வேறு நாடுகளின் வெறுப்பை சம்பாதித்துள்ளார். குறிப்பாக வடகொரியாவுக்கும், டிரம்ப்புக்கும் சுத்தமாகவே ஆகாது.

இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜான் உன், வடகொரியா மீது வாஷிங்டன்னின் பார்வையில், கொள்கையில் ஒருநாளும் எந்த ஒரு மாற்றமும் வரப்போவதில்லை.

ஆகையால் எதிரிகளை சமாளிக்கும் வகையில், அணுஆயுதங்கள், ஸ்பை செயற்கைகோள்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் என அனைத்தையும் அதிகளவில் தயாரித்து இருப்பில் வைக்க வேண்டும்.

நமது அரசியல் கொள்கை நம்முடைய புரட்சிகரமான வளர்ச்சிக்கு மிகப்பெரிய எதிரியாக இருக்கும் அமெரிக்காவை சமாளிக்கும் வகையில் அமைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்