பரவும் புதிய வீரியம் மிக்க தொற்று... ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஸ்தம்பித்த மருத்துவமனைகள்: எங்கும் மரண ஓலம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
1800Shares

பிரேசில் நாட்டில் பரவும் புதிய வீரியம் மிக்க கொரோனா தொற்றால் மொத்த மருத்துவமனைகளும் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பெரும்பாலான மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக இறப்பு விகிதம் ஒவ்வொரு மணிக்கும் எகிறும் நிலை ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளால் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், உறவினர்களையே ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்ய மருத்துவர்கள் பலர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதனால், பிரேசில் நாட்டில் பெரும்பாலான மருத்துவர்கள் இனி யார் பிழைக்க வேண்டும் என்ற மிக மோசமான அந்த முடிவை எடுப்பார்கள் என்றே அஞ்சப்படுகிறது.

புதிய வீரியம் மிக்க கொரோனா தொற்றால் பிரேசிலின் மனாஸ் பகுதி ஸ்தம்பித்துள்ளது. இது ஏற்கனவே பரவி வரும் கொரோனா தொற்றை விடவும் ஆபத்தானது என்பதால், பாதிப்பு எண்ணிக்கையும் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கொரோனா பெருந்தொற்றின் முதல் அலை ஏற்பட்ட நாட்களில் மனாஸ் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், சடலங்களை கொத்துக் கொத்தாக புதைக்கும் சூழல் ஏற்பட்டது.

தற்போது அதைவிட மிக மோசமான நிலைமை மனாஸ் பகுதியில் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவமனைகள் மொத்தம் ஸ்தம்பித்துள்ளதால், எங்கும் மரண ஓலங்களே கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி மனாஸ் பகுதியில் மொத்தமுள்ள 2.2 மில்லியன் மக்கள் தொகையில் தற்போது 70 சதவீத மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.

இதனால் கொரோனா தடுப்பூசி பயனற்றதாக இங்கு மாறியுள்ளது. நூற்றுக்கணக்கான நோயாளிகளை ஹெலிகொப்டர் மூலம் வேறு மாகாணங்களுக்கு மாற்றியுள்ளனர்.

இருப்பினும், அவசர சிகிச்சை பிரிவில் படுக்கை கேட்டு இன்னும் 500 நோயாளிகள் ஆபத்தான நிலையில் காத்திருப்பதாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாததால் வயதான கொரோனா நோயாளிகளை குடியிருப்பிலேயே மரணத்திற்கு கைவிடப்படும் பரிதாப நிலையும் ஏற்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்