வெளிநாட்டு பயணிகள் தான் இதற்கு காரணம்! கொரோனா விஷயத்தில் இருந்து தப்பிக்க சீனா செய்யும் நரித்தனம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
172Shares

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா, அதன் பின் உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவியது.

குறிப்பாக, பெய்ஜிங், சிச்சுவான், லியோனி, ஹிபே, ஹாய்லாங்ஜங்க் உள்ளிட்ட பகுதிகளில் வைரஸ் தாக்கம் அதிகரித்து உள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டின் தேசிய சுகாதார கமிஷன் கடந்த சனிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், சீனாவின் வடகிழக்குப் பகுதியில் சமீபத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததற்கு வெளிநாட்டு பயணிகள் குளிர்ப்படுத்தப்பட்ட பதப்படுத்திய உணவுகளை தங்கள் நாட்டுக்குள் எடுத்து வந்ததுதான் காரணம் என்று தெரிவித்துள்ளது.

அந்நாட்டு சுகாதார துறை இணைய தளத்திலும் அவரது கருத்து வெளியிடப்பட்டுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் இருந்து வைரஸ் எவ்வாறு உலகுக்குப் பரவியது என்று ஆராய உலக சுகாதார அமைப்பு தற்போது சீனா சென்றுள்ளது.

பல்வேறு நாடுகளில் இருந்து வந்த இந்த அமைப்பின் மருத்துவ விஞ்ஞானிகள் தற்போது 14 நாட்கள் கட்டாய ஊரடங்கில் பாதுகாக்கப்படுகின்றனர். இந்த 14 நாட்கள் முடிவதற்குள் சீனா பல வதந்திகளை கிளப்ப முயல்கிறது.

வூஹான் நகரிலிருந்து வைரஸ் திட்டமிட்டு பரப்பப்பட்டதா என்கிற ரீதியில் இவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை திசை திருப்ப வெளிநாட்டுப் பயணிகள் கொண்டுவந்த உணவுப்பொருட்கள் மூலமாகவே வைரஸ் பரவியதாக சீன அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்