உலகின் முதல் கொரோனா நோயாளி மர்மமான முறையில் மாயம்... உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
247Shares

உலகின் முதல் கொரோனா நோயாளி மர்மமான முறையில் மாயமாகியுள்ள நிலையில், அவர் கண்டுபிடிக்கப்படாமலே போக சாத்தியமுள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவின் வுஹானிலுள்ள இரகசிய ஆய்வகம் ஒன்றில் அறிவியலாளராக பணியாற்றிய Huang Yanling என்ற பெண்தான் உலகின் முதல் கொரோனா நோயாளியாக கருதப்படுகிறார். சீனா அதிகாரப்பூர்வமாக கொரோனாவை ஒப்புக்கொள்வதற்கு சில மாதங்கள் முன்பே Yanlingக்கு கொரோனா தொற்றியிருக்கலாம் என கருதப்படுகிறது.

Yanlingக்கு கொரோனா பரவியதாக கூறப்படுவதை மறுத்துள்ள வுஹான் வைரஸ் ஆய்வு நிறுவனம், அவர் அந்நிறுவனத்தில் படித்து முடித்ததுமே வேறிடத்தில் வாழவும் வேலை செய்யவும் சென்றுவிட்டதாகவும் தனது இணையதளத்தில் தெரிவித்திருந்தது.

Image: @BonicMichael /Twitter

அதைத் தொடர்ந்து WeChat தளத்தில் தோன்றிய Yanling, தான் உயிருடன் இருப்பதாகவும், தனக்கு கொரோனா என்பதெல்லாம் பொய் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால், அதற்குப் பின் Yanling மாயமாகிவிட்டார்.

அவர் சீனாவால் காணாமல்போக செய்யப்பட்டிருக்கலாம், அதாவது ஒன்றில் அவர் வேறெங்கோ கொண்டு போய் மறைத்துவைக்கப்பட்டிருக்கலாம், அல்லது அவர் இறந்துபோய், அவரது உடல் உரகசியமாக எரிக்கப்பட்டிருக்கலாம் என செய்திகள் உலாவருகின்றன.

ஆனால், அதெல்லாம் உண்மையில்லை, அமெரிக்கா பரப்பி விட்டுள்ள பொய்கள் என்கிறது சீனா!

Image: @BonicMichael /Twitter

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்