ஈராக் தலைநகர் பாக்தாதில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ரொக்கெட்டுகள் வீசி தாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாக்தாதில் உச்ச பாதுகாப்பு வளையத்தில் அமைந்துள்ள பகுதியில் குறித்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மூன்று முறை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஒரு ரொக்கெட் உச்ச பாதுகாப்பு பகுதியில் விழுந்ததாகவும், எஞ்சிய இரு ரொக்கெட்டுகளும் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
ஒரே வாரத்தில் இது மூன்றாவது முறையாக அமெரிக்க தூதரகம், இராணுவ தளம், குடியிருப்பு பகுதிகள் என ரொக்கெட் வீச்சு நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க தூதரகம் இந்த தாக்குதலைக் கண்டித்துள்ளதுடன், ஈராக் அரசியல் மற்றும் அரசாங்கத் தலைவர்கள் அனைவரையும் இதுபோன்ற தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
குறித்த தாக்குதலில் தூதரக வளாகத்தில் சில சிறிய சேதம் ஏற்பட்டது, ஆனால் காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் இல்லை என தூதரக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.