பிரதமரை சந்தித்த தங்கமகன் மாரியப்பன்

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்தியாவின் தங்கமகன் மாரியப்பன் நேற்று பிரதமரை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார்.

பிரேசிலில் நடைபெற்ற ஊனமுற்றோருக்கான பாரா ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 19 வீரர்கள் கலந்து கொண்டு 4 பதக்கங்கள் பெற்றனர்.

அதில் 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களுடன் பாரா ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் இந்தியா 43வது இடத்தை பிடித்தது.

தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் உயரம் தாண்டுதலில் தங்கமும், இதே பிரிவில் கலந்து கொண்ட மற்றொரு வீரர் வருண்சிங் வெண்கலமும் வென்றனர்.

ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் தேவேந்திரா ஜாஜாரியா தங்கமும், பெண்களுக்கான ஈட்டி எறிதலில் தீபா மாலிக் வெள்ளி பதக்கமும் வென்று அசத்தினர்.

பாரா ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து இந்திய வீரர்கள் அனைவரும் நேற்று டெல்லி விமான நிலையம் வந்தடைந்தனர்.

அவர்கள் அனைவருக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர்கள் நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments