என் மனைவி மனநிலையை இழந்துவிட்டாள்: முகமது சமி பேட்டி

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

தன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வரும் தனது மனைவி ஜகான், மனநிலையை இழந்துவிட்டதாக முகமது சமி கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது சமியின் மனைவி ஹசின் ஜகான், தனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும், சமி தன்னை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்துவதாக கொல்கத்தா காவல் நிலையத்தில் ஜகான் புகார் அளித்துள்ளார்.

இதோடு சமி மீது கிரிக்கெட் சூதாட்ட புகாரையும் கூறினார்.

இந்நிலையில் தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த முகமது சமி கூறுகையில், என் பெயருக்கு களங்கம் விளைவிக்க சதி நடக்கிறது.

இது குறித்து சரியான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

ஜகான் தனது மனநிலையை இழந்துவிட்டாள், அவள் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை,

அது உண்மையென்றால் அவள் அதை நிரூபிக்க வேண்டும். ஜகானை போன் மூலம் தொடர்பு கொள்ள நான் முயற்சித்தும் அவர் என் அழைப்புகளை எடுக்கவில்லை.

நானும் என் குடும்பமும் ஜகானுடன் தங்கவே விரும்புகிறோம், நான் ஜகானை காதலிக்கிறேன் என்று அவளிடம் சொல்லவே விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...