டோனி பிறந்தநாள் பார்ட்டியில் கோஹ்லியை கோபத்தில் முறைத்த அனுஷ்கா சர்மா: இதுதான் காரணமா?

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
323Shares
323Shares
lankasrimarket.com

டோனி பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கோஹ்லியை அவர் மனைவி அனுஷ்கா சர்மா முறைக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் டோனி இரு தினங்களுக்கு முன்னர் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

இதையடுத்து ஓய்வறையில் டோனி கேக் வெட்டினார், இதையடுத்து எல்லாரும் கேக்கை வீசியும், முகத்திலும் பூசியும் ஆரவாரம் செய்தனர்.

அப்போது விராட் கோஹ்லி டோனி அருகில் நின்றிருந்த நிலையில் அவர் மனைவி அனுஷ்கா சர்மா அவரை கோபத்துடன் முறைத்து பார்த்தார்.

அனுஷ்கா ஏன் அப்படி முறைத்து பார்த்தார் என்ற சரியான காரணம் தெரியவில்லை.

ஆனால் சாப்பிடும் கேக்கை ஏன் இப்படி வீணாக்குகிறீர்கள் என அனுஷ்கா கோஹ்லியை பார்த்து கோபத்தில் கேட்பது போலவே அவரின் முகபாவனை இருந்தது.

இதையே தான் ரசிகர்கள் பலரும் டுவிட்டரில் கூறியுள்ளனர்.

ஏற்கனவே அனுஷ்கா சர்மா காரில் சென்ற போது பக்கத்தில் வேறு காரில் பயணித்த நபர் குப்பையை சாலையில் வீசியதால் கோபமடைந்த அனுஷ்கா அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்