குடிபோதையில் கார் ஓட்டிய பிரான்ஸ் கால்பந்து கேப்டன்: 20 மாதம் தடை மற்றும் 50 ஆயிரம் பவுண்டு அபராதம் விதிப்பு

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்
264Shares
264Shares
lankasrimarket.com

பிரான்ஸ் கால்பந்து அணியின் தலைவர் லோரிஸ்க்கு, குடிபோதையில் கார் ஓட்டியதற்காக 20 மாதங்கள் தடையுடன் 50 ஆயிரம் பவுண்டு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் கால்பந்து அணித்தலைவரான ஹியூகோ லோரிஸ், இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்காக விளையாடி வருகிறார்.

இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி குடிபோதையில் கார் ஓட்டியதாக, மத்திய லண்டன் பொலிசாரால் லோரிஸ் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு அனுமதித்த அளவை விட இரண்டு மடங்கு அதிகமாக மது அருந்திவிட்டு, லோரிஸ் கார் ஓட்டியதாக வாதம் முன் வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, லோரிஸ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு கார் ஓட்டுவதற்கு 20 மாதங்கள் தடை மற்றும் 50 ஆயிரம் பவுண்டு அபராதம் விதிக்கப்பட்டது.

Reuters

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்