மொழி தெரியாமலே காதல்! விளையாட சென்ற இடத்தில் வீராங்கனையிடம் காதலை கூறிய வீரர்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

இந்தியாவை சேர்ந்த பிரபல செஸ் வீரர், விளையாட்டு போட்டிக்கு சென்ற இடத்தில் கொலைம்பியாவை சேர்ந்த வீராங்கனையிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜார்ஜியாவில் 43 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று வருகிறது, இதில் 189 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ள இந்திய செஸ் வீரர் Niklesh Jain (34), கடந்த செவ்வாய்க்கிழமையன்று கொலம்பியா நாட்டை சேர்ந்த, Angela Lopez என்ற செஸ் வீராங்கனையிடம் தன்னுடைய காதலை கூறியுள்ளார்.

அதனை Angela ஏற்றுக்கொண்டு Niklesh கொடுத்த மோதிரத்தை அணிந்து கொண்டார்.

இதுகுறித்து Niklesh கூறுகையில், நான் Angela-வை முதன்முதலாக பார்சிலோனாவில் தான் சந்தித்தேன். அப்போது ஒரு திறமையான வீரரை நான் எதிர்கொண்டு வெற்றி பெற்றேன்.

அதன் மூலம் Angela-வை ஈர்க்கவில்லை என்றாலும், ஆரம்பத்தில் மொழி தெரியாமல் இருவரும் பேச சிரமப்பட்டோம். இருவரும் மொழி பெயர்ப்பாளர்களை வைத்து தான் பேசிக்கொண்டோம்.

செவ்வாய்க்கிழமை கொலம்பியா, சீனாவை எதிர்கொள்வதற்கு முன்பு நான் அவரிடம் காதலை கூறுவதை பற்றி நானும், கிரான்மாஸ்டர் பட்டம் வென்ற Angela-வின் சகோதரியும் முன்னதாகவே திட்டமிட்டிருந்தோம். அது போலவே நடந்தது என கூறினார்.

மேலும் உலக சமாதானத்திற்கு எந்த மொழியும், நிறமும் எதுவுமே தேவையில்லை. ஒரு நல்ல மனிதராக மட்டுமே இருந்தால் போதும் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்