இத்தாலியில் திருமணம் செய்து கொண்ட கோஹ்லி இப்படி பேசுவது முட்டாள்தனமாது: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணியின் தலைவரான கோஹ்லி, ரசிகர் ஒருவரிடம் தன்னுடைய பேட்டிங் பிடிக்கவில்லை என்றால் நாட்டைவிட்டு வெளியேறும்படி கூறியது தற்போது சமூகவலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ரசிகர்களை பொறுத்தவரை பல்வேறு நாட்டு வீரர்கள் மீது அதிக பாசம் வைப்பார்கள். பிரைன் லாரா, அப்ரிடி, ஸ்டீவ் வாஹ், வாசிம் அக்ரம், முரளிதரன், ஏபிடி வில்லியர்ஸ், ஷேன் வார்னே உள்ளிட்ட பல்வேறு வீரர்களை இந்திய பிடிக்கும்.

அதேபோல் சச்சின்,தோனி உள்ளிட்டோருக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். ஏன் விராட் கோலிக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அப்படி இருக்கையில் விராட் கோஹ்லியின் இந்த கருத்துக்கு அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தனக்கு பிடித்த வீரரை கூறுவது அனைவரது விருப்பம், ஆனால் நாட்டை விட்டு வெளியேற சொல்ல அவருக்கு உரிமையில்லை இத்தாலியில் திருமணம் செய்து கொண்ட கோஹ்லி, இப்படி பேசலாமா என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட் என்பது ஒரு உலகலாவிய விளையாட்டு. இதை ரசிப்பவர்கள் பல நாட்டு வீரர்களுக்கும் ரசிகர்களாக இருப்பர்.

இதில் தன் நாட்டு வீரரை மட்டுமே ரசிக்கவேண்டும் என நினைப்பது முட்டாள்தனம் என பதிவிட்டுள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers