இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் இவர் தான்... கசிந்தது தகவல்

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரியே அறிவிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் யார் என்பதை இன்று மாலை கபில்தேவ் தலைமையிலான குழு, அறிவிக்க இருக்கிறது.

இந்நிலையில் தலைமை பயிற்சியாளர் தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. தற்போதைய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, அவுஸ்திரேலியாவின் டாம் மூடி, நியூசிலாந்து முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெஸன், இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ராபின் சிங், லால்சந்த் ராஜ்புத், ஓய்வு பெற்ற மேற்கிந்திய தீவுகள் ஆல்ரவுண்டர் பில் சிம்மன்ஸ் ஆகியோரை கொண்ட இறுதிப்பட்டியல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பயிற்சியாளரை தேர்வு செய்ய கபில்தேவ் தலைமையில் அன்ஷூமன் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோரை கொண்ட குழு, இறுதிப்பட்டியலில் இடம்பெற்ற ஆறு பேரிடம் இன்று நேர்காணல் காண்கின்றனர். இதில் இருந்து ஒருவர் தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

சாஸ்திரி தற்போது இந்திய கிரிக்கெட் அணியுடன் மேற்கிந்திய தீவுகளில் உள்ளதால், அவரிடம் வீடியோ அழைப்பு மூலம் நேர்காணல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியே மீண்டும் அறிவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்