அவருடையது தான் வேண்டும்.. 7 வயது சிறுவனிடம் ஆட்டோகிராப் வாங்கிய கோஹ்லி! வைரலாகும் வீடியோ

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, 7 வயது சிறுவனிடம் ஆட்டோகிராப் வாங்கிய வீடியோ வைரலாகியுள்ளது.

விராட் கோஹ்லி இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அத்துடன் அவரது ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கிண்ண தொடரில், இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகையான மூதாட்டி ஒருவருக்கு, அவர் கேட்ட இலவச இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகளை கோஹ்லி அனுப்பி வைத்தார்.

இந்நிலையில், ஜமைக்காவில் 7 வயது சிறுவன் ஒருவனிடம் கோஹ்லி ஆட்டோகிராப் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் குறித்த சிறுவன் கோஹ்லியிடம் வந்து, உங்கள் ஆட்டோகிராப்புக்கு பதிலாக எனது ஆட்டோகிராப்பை விரும்புகிறீர்களா? என்று கேட்கிறார். பின் தனது ஆட்டோகிராப்பை அந்த சிறுவன் போடும்போது, மற்றொரு சிறுவன் அங்கு வந்து தனக்கு ஆட்டோகிராப் வேண்டும் என்று கோஹ்லியிடம் கேட்டுள்ளார்.

அப்போது அவர், ‘இருங்கள்! எனக்கு இவருடைய ஆட்டோகிராப் வேண்டும்’ என கூறினார். ஆட்டோகிராப் வாங்கிய பின்னர், ‘இதை பாருங்கள்! அழகாக உள்ளது’ என தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவிடம் கூறினார் கோஹ்லி.

இந்த வீடியோவில் கோஹ்லியும், அனுஷ்கா ஷர்மாவும் சிரித்தபடியே இருந்தனர். இதனை நபர் ஒருவரு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து, தற்போது சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்