தொடருக்கான மொத்த ஊதியத்தையும் அள்ளிக் கொடுத்த இளம் வீரர்: நெகிழ்ச்சி செயல்

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்

தொடருக்கான தனது மொத்த ஊதியத்தையும் மைதானத்தின் ஊழியர்களுக்கு இந்திய ஏ அணியின் வீரர் சஞ்சு சாம்சன் வழங்கியுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்தியா ஏ அணியுடன் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா ஏ அணி விளையாடியது.

இந்தத் தொடரின் கடைசி போட்டி நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய ஏ அணி 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

அத்துடன் ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது. இந்திய ஏ அணியின் சார்பில் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடினார். இவர் 48 பந்துகளில் 91 ஓட்டங்கள் விளாசினார்.

இந்நிலையில் இந்தப் போட்டியின் இறுதியில் சஞ்சு சாம்சன் ஒரு நெகழ்ச்சியான முடிவை அறிவித்தார்.

அதாவது இந்தப் தொடருக்கான தனது மொத்த ஊதியத்தையும் மைதானத்தின் ஊழியர்களுக்கு அளிக்க உள்ளதாக கூறினார்.

இதுகுறித்து, “இந்தப் போட்டிகள் நடைபெற்றதற்கு முக்கிய காரணம் மைதானத்தின் ஊழியர்கள் தான். ஏனென்றால் மழையினால் மைதானம் ஈரப்பதமாக இருந்தது. இதனை போக்க அவர்கள் தீவிரமாக பணியாற்றினர்.

அவர்கள் இல்லை என்றால் இந்தப் போட்டிகள் நடைபெற்று இருக்காது. ஆகவே அவர்களுக்கு என்னுடைய தொடருக்கான மொத்த ஊதியத்தையும் அளிக்க உள்ளேன்.

அதாவது என்னுடைய சம்பளமான ரூபாய் 1.5 லட்சத்தையும் மைதானத்தின் ஊழியர்களுக்கு அளிக்க உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...