நன்றி மறந்த இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்... விரக்தியில் சோயப் அக்தர்!

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திலிருந்து இலங்கை அணியை சேர்ந்த 10 வீரர்கள் விலகியிருப்பது தமக்கு பெரிய ஏமாற்றத்தை அளிப்பதாக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் வேதனை தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணி ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

ஆனால் பாதுகாப்பு கருதி இலங்கை அணியை சேர்ந்த 10 வீரர்கள் தொடரில் பங்கேற்கவில்லை என கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் அனுப்பினர். அவர்களின் நலனை கருத்தில் கொண்டு கிரிக்கெட் வாரியமும், விருப்பமுள்ள இளம்கிரிக்கெட் வீரர்களை அனுப்ப முன்வந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தானை சேர்ந்த அமைச்சர்கள், பிரபலங்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திலிருந்து 10 இலங்கை வீரர்கள் விலகியிருப்பது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. பாகிஸ்தான் எப்போதும் இலங்கை கிரிக்கெட் வாரியதிற்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது".

சமீபத்தில் இலங்கையில் நடந்த கொடிய ஈஸ்டர் தாக்குதலுக்கு பிறகு எங்களுடைய 19 வயதுக்குட்பட்ட அணி அங்கு சுற்றுப்பயணத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கு விளையாட தாமாக முன்வந்த முதல் சர்வதேச அணி எங்களுடையது தான்.

அதேபோல 1996 உலகக் கோப்பையை யார் மறக்க முடியும், அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்ய மறுத்துவிட்டன. கொழும்பில் நட்புரீதியான போட்டியில் விளையாட பாகிஸ்தான், இந்தியாவுடன் ஒருங்கிணைந்த அணியை அனுப்பியது. இலங்கையிலிருந்து இந்த பரிமாற்றத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

இலங்கை கிரிக்கெட் வாரியம் எங்களுக்கு ஒத்துழைக்கிறது. அதேபோல வீரர்களும் ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்