இலங்கையிடம் படுதோல்வி எதிரொலி.. பாகிஸ்தான் அணித்தலைவர் சர்பராஸிக்கு நேர்ந்த கதி: வறுத்தெடுக்கும் வீடியோ

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கையிடம் டி-20 தொடரை 3-0 என முழுமையாக தோல்வியடைந்ததின் எதிரொலியாக பாகிஸ்தான் அணித்தலைவர் சர்பராஸை அந்நாட்டு பத்திரிக்கையாளர்கள் வறுத்தெடுத்துள்ளனர்.

சமீபத்தில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி அனுபவமிக்க வீரர்கள் இல்லாத இலங்கை அணி, 2-0 என ஒருநாள் தொடரில் தோல்வியடைந்தது. ஆனால், 3-0 என டி-20 கைப்பற்றி அசத்தியது.

இதனால், பாகிஸ்தான் வீரர்கள் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டனர். அந்த வரிசையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஈடுபட்ட அணித்தலைவர் சர்பராஸ் அகமதை அந்நாட்டு பத்திரிக்கையாளர்கள் கேள்விகளால் அசிங்கப்படுத்தியுள்ளனர்.

நீங்கள் கிரிக்கெட் ரசிகர்களை மிகவும் ஏமாற்றிவிட்டீர்கள், அவர்கள் உங்களை விமர்சிக்க தொடங்கிவிட்டனர். தேசிய டி-20 கோப்பையில் நீங்கள் விளையாடுவதைப் பார்க்க யார் வருவார்கள்? என பத்திரிகையாளர் ஒருவர் சர்பராஸிடம் கடுமையான கேள்விகளை எழுப்பினார்.

இதற்கு பதில் செல்ல முடியாமல் சர்பராஸ் அகமது திணறினார். உலகக் கோப்பையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்த போதும் சர்பராஸ் அந்நாட்டு ரசிகர்களிடமிருந்து கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார் என்பது நினைவுக் கூரதக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்