டோனியின் எதிர்காலம்.. பிசிசிஐ தலைவராகவுள்ள கங்குலி முக்கிய தகவல்: அந்த நாளுக்காக ஆவலுடன் ரசிகர்கள்

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய நட்சத்திர வீரர் டோனியின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்க உள்ள சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பையில் தோல்வியடைந்த நாள் முதல் ஓய்வில் சென்ற டோனி, எப்போது, எந்த போட்டியில் விளையாடுவார் என்பது குறித்த தகவல் தெரியாமல் ரசிகர்கள் திண்டாடி வருகின்றனர்.

டோனி குறித்து பிசிசிஐ தலைவராக வர உள்ள சவுரவ் கங்குலியிடம் கூறுகையில், நான் 24-ம் திகதி இந்திய அணியின் தேர்வுக்குழுவினரைச் சந்திக்க இருக்கிறேன். அவர்களைச் சந்திக்கும்போது டோனி குறித்து அவர்கள் என்ன நினைத்திருக்கிறார்கள், கண்டுபிடித்திருக்கிறார்கள் என்பதை அறிவேன். அதன்பின் டோனியின் எதிர்காலம் குறித்து எனது கருத்தைத் தெரிவிக்கிறேன்.

டோனி ஏன் ஓய்வில் இருக்கிறார், எதற்காக ஓய்வில் இருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது. அவருக்கு என்ன தேவை என்பதையும் அறிய வேண்டும் என கங்குலி குறிப்பிட்டார்.

மேலும் பேசி கங்குலி இந்தியாவில் பகலிரவு டெஸ்ட் போட்டி நடத்துவதில் எனக்கு அதிகமான விருப்பம். அதற்கான முயற்சிகளை எடுப்பேன். அதை எப்படிச் செயல்படுத்துவது என்பது இப்போதே கூறுவது கடினம். ஒவ்வொரு உறுப்பினருடன் கலந்தாய்வு செய்த பின் முடிவு எடுக்கலாம்" எனத் தெரிவித்தார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்