கோப்பையை வென்ற கையோடு தமிழ்ப்பட நடிகையை கரம்பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே, தமிழ் படங்களின் மூலம் பிரபலமான நடிகை அஷ்ரிதா ஷெட்டியை இன்று திருமணம் செய்துள்ளார்.

துளு படத்தின் மூலம் அறிமுகமானாலும், உதயம் NH4, ஒரு கன்னியும் மூனு களவாணிகளும், இந்திரஜித் உள்ளிட்ட தமிழ் படங்களின் மூலம் சினிமாவில் பிரபலமானவர் நடிகை அஷ்ரிதா ஷெட்டி(26). இவர் தற்போது 'நான் தான் சிவா' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இவரும் இந்திய கிரிக்கெட் வீரரான மனிஷ் பாண்டேவும் நீண்ட நாட்களாகவே காதலித்து வருவதாக பல்வேறு யூகங்கள் இருந்தபோதிலும், ஒருமுறை கூட இருவரும் பொதுவெளியில் தோன்றாததால், உறுதி செய்யமுடியாத செய்தியாகவே இருந்து வந்தது.

Instagram

இந்த நிலையில் இருவருக்கும் தற்போது தென்னிந்திய முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது.

தமிழகத்திற்கு எதிராக நேற்று நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி போட்டியில், தனது அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்ற மனிஷ் பாண்டே, போட்டிக்கு பிந்தைய விளக்கக்காட்சியின் போது தனது திருமணத்தைப் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

Instagram

"இந்தியா தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்கு முன், எனக்கு இன்னொரு முக்கியமான தொடர் உள்ளது. நான் நாளை திருமணம் செய்து கொள்கிறேன்", என்று அவர் உற்சாகமாக கூறினார்.

இந்த நிலையில் இருவரும் ஒன்றாக இருக்கும் திருமண படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

Instagram

Instagram

Instagram

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்