விராட்கோஹ்லியை தொடர்ந்து தவறை ஒப்புக்கொண்ட ரோகித்: அபராதம் விதித்த ஐசிசி!

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

நியூசிலாந்துக்கு எதிரான 5வது டி-20 போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக இந்திய அணிக்கு 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 5-0 என்கிற கணக்கில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது.

இதில் நேற்று நடந்து முடிந்த 5வது டி20 போட்டியில் இந்திய அணி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

இந்த போட்டியின்போது இந்திய அணி மெதுவாக பந்து வீசியதாக நடுவர்கள் கிறிஸ் பிரவுன் மற்றும் ஷான் ஹெய்க் மற்றும் மூன்றாவது நடுவர் ஆஷ்லே மெஹ்ரோத்ரா ஆகியோர் குற்றம் சுமத்தினர்.

இதனையடுத்து இந்திய கிரிக்கெட் அணிக்கு 20% அபராதம் விதித்து ஐசிசி உத்தரவு பிறப்பித்ததுள்ளது. கேப்டன் ரோகித்சர்மா குற்றத்தை ஒப்புக்கொண்டதால் முறையான விசாரணை தேவையில்லை என கூறப்பட்டுள்ளது.

முன்னதாக நான்காவது டி20 போட்டியிலும் இதேபோல மெதுவாக பந்துவீசியதால் இந்தியாவுக்கு சம்பளத்திலிருந்து 40 சதவீத அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...