உன்னை அதிகம் நேசிக்கிறேன்! திருமண நாளில் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட இலங்கை அணி வீரர்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தில்ஷன் முனவீர தனது திருமண நாளை நேற்று கொண்டாடிய நிலையில் மனைவியுடன் இருக்கும் ரொமாண்டிக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இலங்கை சர்வதேச கிரிக்கெட் அணி வீரர் தில்ஷன் முனவீர 2 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும், 13 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

மேலும் 83 முதல் தர போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். முனவீரவுக்கும், சஞ்சீவனி பலிஹகாரா என்ற பெண்ணுக்கும் கடந்த 2016ல் திருமணம் நடந்தது.

இந்நிலையில் இந்த தம்பதிக்கு நேற்று 4ஆம் ஆண்டு திருமணநாள் ஆகும்.

இதையடுத்து டுவிட்டரில் மனைவியுடன் இருக்கும் புகைப்படஙளை முனவீர வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில், என் அன்பான மனைவிக்கு திருமணநாள் வாழ்த்துக்கள், உன்னை அதிகமாக நேசிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்