மகனுக்கு ஹேர் கட் செய்த சச்சின்!... வைரலாகும் வீடியோ

Report Print Fathima Fathima in ஏனைய விளையாட்டுக்கள்

இந்தியாவில் சலூன் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் பெரும்பாலானவர்கள் தங்கள் வீடுகளிலேயே முடி திருத்தம் செய்து கொள்கின்றனர்.

இந்திய அணி கேப்டன் கோஹ்லிக்கு அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும், புஜாராவுக்கு மனைவி பூஜாவும் ‘ஹேர் கட்’ செய்தனர். இந்த வரிசையில் கிரிக்கெட் ‘ஜாம்பவான்’ சச்சினும் இணைந்துள்ளார்.

தனது மகன் அர்ஜுனுக்கு இவர் ‘ஹேர் கட்’ செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இதை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள சச்சின், ஒரு தந்தை என்ற முறையில் நீங்கள் உங்களது குழந்தைகளுடன் விளையாட வேண்டும், இந்த ஹேட் கட் காரணமாக எப்போதும் நீ அழகாக இருப்பாய், என்னுடைய மகளுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்