கேல் ரத்னா விருதுக்கு மாரியப்பன் தங்கவேல் பரிந்துரை

Report Print Fathima Fathima in ஏனைய விளையாட்டுக்கள்
77Shares

மாற்றுத் திறனாளர்களுக்கான பாராலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருது கேல் ரத்னா, ஆண்டுதோறும் சாதனை படைத்த வீரர்களுக்கு இவ்விருது வழங்கப்படும்.

இந்த விருதுக்கு பிரேசிலில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டு அமைச்சகத்தை சேர்ந்த 12 பேர் கொண்ட தெரிவு குழுவினர் இந்த பரிந்துரையை செய்துள்ளனர்.

மாரியப்பன் தவிர, இந்திய கிரிக்கெட் வீரா் ரோஹித் சா்மா, மகளிர் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா ஆகிய 4 பேரின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்