ஹொட்டல் பயிற்சி பெண்ணான சாக்‌ஷியை திருமணம் செய்த டோனி! இருவருக்கும் காதல் மலர்ந்தது எப்படி?

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் டோனி கடந்த 2010ஆம் ஆண்டு தனது பிறந்தநாளுக்கு 3 நாட்கள் முன் டெஹ்ராடூனில் சாக்ஷியை திடீரென திருமணம் செய்து கொண்டார்.

பாலிவுட் படமான எம்.எஸ். டோனி தி அன்டோல்ட் ஸ்டோரி இருவரும் எப்படி சந்தித்தார்கள் என்பதைக் காட்டினாலும் அது உண்மை கிடையாது. படத்தில் காட்டப்பட்டதைவிட சற்று வித்தியாசமானது.

கொல்கத்தா தாஜ் பெங்கால் ஹொட்டலில் தான் இவர்களின் முதல் சந்திப்பு நடைபெற்றது. பாகிஸ்தான் போட்டிக்காக இந்திய அணி அந்த ஹொட்டலில் தங்கி இருந்தனர்.

டோனியின் நெருங்கிய நண்பரும், மேனேஜருமான யுதாஜித் தத்தா தான் சாக்ஷியின் தோழியாக இருந்தார். டோனியை தத்தா பார்க்க செல்லும் போது அந்த ஹொட்டலில் பயிற்சி பெற்று வந்த சாக்ஷியும் அவருடன் சென்றார்.

டோனியை சந்தித்த பின் சாக்ஷி அங்கிருந்து சென்றபின் தனது நண்பர் தத்தாவிடம் சாக்ஷியின் மொபைல் நம்பரை வாங்கி அவருக்கு மெசேஜ் செய்துள்ளார் டோனி.

அதன்பின் இருவரும் நண்பர்களாக பழகி 2008-ம் ஆண்டு முதல் டேட்டிங் செய்தனர், அந்த தருணத்தில் இருவரும் தங்களின் காதலை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்திய நிலையில் 2010ல் திருமணம் செய்து கொண்டனர், இந்த தம்பதிக்கு அழகான மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்