ஆண்களில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் வலி நிவாரணி தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
191Shares
191Shares
lankasrimarket.com

குறித்த ஒரு நோயைக் குணப்படுத்த பயன்படுத்தும் மாத்திரைகள் அல்லது நிவாரணிகளால் பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகவே இருக்கின்றன.

அதேபோன்று Ibuprofen எனும் பொதுவான வலி நிவாரணியை தொடர்ச்சியாக பயன்படுத்துவதனால் ஆண்களில் மலட்டுத்தன்மை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இவை விதையுறுப்புக்களில் பாதிப்பனை ஏற்படுத்துகின்ற அதேவேளை ஹோர்மோன் உற்பத்தியையும் பாதிக்கின்றதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அதிர்ச்சி தகவலை டென்மார்க்கில் உள்ள Copenhagen பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களே தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆராய்ச்சிக்காக 18 வயது தொடக்கம் 35 வயதிற்கு இடைப்பட்ட 31 ஆண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களுக்கு நாள்தோறும் என்ற அடிப்படையில் ஆறு வாரங்களுக்கு Ibuprofen வழங்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்