கூகுள் குரோம் பயனர்களுக்கு மிகப் பெரிய நன்மையை தரப்போகும் புதிய வசதி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

இன்று உலகளவில் அதிக பயனர்களால் பன்படுத்தப்பட்டுவரும் இணைய உலாவியாக கூகுள் குரோம் விளங்குகின்றது.

இவ்வறான உலாவியின் 71 வது புதிய பதிப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் வெளியிடப்படவுள்ளது.

இப் பதிப்பில் பயனர்களுக்கு மிகப்பெரிய நன்மை தரக்கூடிய புதிய வசதி ஒன்று உள்ளடக்கப்பட்டுள்ளது.

அதாவது பயனர்களின் ஒப்புதல் இன்றியோ அல்லது அவர்களுக்கு தெரியாமலோ பணத்தை அறவிடும் தளங்கள் பற்றி எச்சரிக்கை செய்யும்.

இவ் வசதி குறிப்பாக மொபைல் பில்லிங் சேவையை இலக்கு வைத்தே அறிமுகம் செய்யப்படுகின்றது.

இதற்காக மொபைல் இலக்கம் கூகுள் குரோமில் தரப்படவேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers