உங்கள் அந்தரங்க தரவுகளை அனுமதியின்றி சேமித்து மற்றவர்களுடன் பகிரும் சாதனம் பற்றி தெரியுமா?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

அமேஷான் நிறுவனத்தின் அலக்ஸா சாதனம் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது.

இச் சாதனமானது இணைய இணைப்பு உள்ள வேளையில் பாவனையாளர்களின் கட்டளைக்கு ஏற்ப ஒலி வடிவில் பதில்களை வழங்கக்கூடியதாகும்.

இவ்வாறான செயற்பாட்டினைக் கொண்ட அலெக்ஸா சாதனம் தொடர்பில் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது இச் சாதனமானது பயனர்களின் அனைத்து குரல்வழி கட்டளைகளையும் சேமித்து வைப்பதுடன் தேவையேற்படின் வியாபார நோக்கில் பகிர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறு சேமிக்கப்படும் தரவுகள் எவ்வளவு காலத்திற்கு சேமிக்கப்படும் என்ற வரையறையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது நீண்ட காலத்திற்கு சேமிக்கப்பட்டிருக்கும்.

அமெரிக்காவின் செனட்டர் இது தொடர்பில் அமேஷனிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

குறித்த கேள்விக்கு பதிலளித்த அமேஷனின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஜெப் பெஷோஸ் குரல்கள் பதிவு செய்யப்படுவதை ஏற்றுக்கொண்டுள்ளார்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்