1 Km தூரத்திலுள்ள வாகன இலக்கத்தகடையும் துல்லியமாக படம்பிடிக்கும் கமெரா

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

முன்னணி கமெரா வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான Fujifilm ஆனது அதி வினைத்திறன் வாய்ந்த பாதுகாப்பு கமெரா ஒன்றினை வடிவமைத்துள்ளது.

நீண்ட தூரப் பார்வை கொண்ட இக் கமெராவனது 40X ஒப்டிக்கல் ஷும் உடையதாகவும் இருக்கின்றது.

மேலும் இதன் குவியத்தூரமானது 1000 மில்லி மீற்றர்களாகவும் காணப்படுகின்றது.

இதன் காரணமாக சுமார் 1 கிலோ மீற்றர்கள் தூரத்தில் பயணிக்கும் வாகனம் ஒன்றின் இலக்கத்தகட்டிலுள்ள இலக்கத்தையும் துல்லியமாக படம்பிடித்து காண்பிக்கக்கூடிய ஆற்றலைக் கொண்டிருக்கின்றது.

அத்துடன் இக் கமெராவில் தானியங்கி போகஸ் (Auto Focus) தொழில்நுட்பமும் காணப்படுவதுடன், 0.3 செக்கன்கள் எனும் குறைந்த நேரத்தில் Auto Focus செய்யக்கூடியதாகவும் இருக்கின்றது.

இதேவேளை இக் கமெராவினை விளம்பரப்படுத்தும் வீடியோவில் டோக்கியோ கோபுரத்தினை சுமார் 3 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் இருந்து துல்லியமாக படம் பிடித்துள்ளமை காண்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers